இந்த வெயில் காலத்துல நமக்கு எல்லாருக்குமே ஏத்த ஒரு பொருள் என்னானு கேட்டீங்கன்னா இளநீர்.அதுவும் காலை நேரத்துல தான் நிறைய பேர் இத குடிப்பாங்க ,ஏன் அப்படினு கேட்டீங்கன்னா,இளநீர்ல நிறைய சத்துகள் இருக்கிறதுனால ,நம் உடலுக்கு பல நன்மைகள் தரும் அப்படினு நம்ம எல்லாருக்கும் தெரியும் .ஆனா அந்த இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாதுனு அத தெரிஞ்சிக்கலாம் வாங்க .
சில பேருக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கும்,அதாவது நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஒத்துக்களான அது நமக்கு அலர்ஜியை குடுக்கும்,அந்த மாதிரி இருக்குறவங்க கூட இந்த இளநீரை அதிகமா குடிக்காதீங்க ,ஏனா அது சில சமயங்களில என்னா பண்ணும் தெரியுமா ,அது அலர்ஜியை இன்னும் அதிகமா ஏற்படுத்தி ஒவ்வாய்மை பிரச்சனையை ஏற்படுத்தும் ,இளநீர்ல பாத்தீங்கன்னா விட்டமின்களும் அமினோ அமிலங்களும் நிறைய இருக்கு ,குறிப்பா சொல்ல போனா இளநீர்ல சோடியம் பொட்டாசியம் எந்த உணவிலும் இல்லாத அளவுக்கு இதுல நிறையவே இருக்கு ,இத முக்கியமா இதய நோய் உள்ளவங்களுக்கு அதிகமா குடுப்பாங்க ஏனா இதுல சோடியம் பொட்டாசியம் நிறையவே இருக்கு ,அதுவே அவங்களுக்கு சிறுநீர் பிரச்சனை இருந்தா இத அவங்களுக்கு கொடுக்கவே கூடாது ,அப்படி மீறி நாம குடுத்தோம்னா அது அவங்க உயிருக்கே ஆபத்து .
சர்க்கரை நோய் இருக்குறவங்க இத அதிகமா எடுத்துக்காதீங்க ,இளநீர்ல கார்போ கைட்ரேட் கலோரிகளும் அதிகமா இருந்ததுனால ,ரத்தத்துல இருக்கிற சர்க்கரை அளவ அதிகரிக்குமா ,அதுமட்டும் இல்ல இதுல சோடியம் அதிகமா இருக்குறதுனால ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ,சில பேரு இளநீர எதுக்காக குடிப்பாங்க ,வெப்பத்தை குறைக்க குடிப்பாங்க ,ஆனா சில் பேருக்கு இயற்கை யாகவே குளிர்ச்சி உடல் பாகம் இருக்கும் ,அந்த மாதிரி இருக்குறவங்க இத குடிக்காம இருக்கிறதுதான் நல்லது ,அதையும் மீறி இந்த இத குடிச்சா காய்ச்சல் மத்த நிறைய நோய் வரலாம்.
இந்த இளநீரை எல்லாரும் காலையில் வெறும் வயித்துல தான் குடிப்பாங்க ,ஆனா இருக்கிறதுலே அதுதாங்க ரொம்ப தப்பு ,அதுல இருக்கிற அதிகமான அமில தன்மை என்னா பன்னும்னா நம்ம வயித்துல புண்களை உருவாக்கும் ,மேலும் காலையில் வெறும் வயித்துல குடிக்கிறதுனால அதுல இருக்கிற பொட்டாசியம் தாதுக்கள் எல்லாம் வெளியேற முடியாமல் ,சிறுநீரகத்துல பாதிப்பை ஏற்படுத்தும் ,அதுமட்டுமில்லாம பசியை கொறைச்சி குன்மம் அப்படிங்கிற வயித்து புன்னை உருவாகுமாம் ,அதுனால் காலையில் வெறும் வயித்துல இளநீரை குடிச்சீங்கனா அத தவிர்க்க பாருங்க ,இந்த விளையாட்டு வீரர்கள் எல்லாருக்கும் ஏற்ற நீர் இந்த இளநீரை தான் சொல்லுவாங்க ,ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு இது உண்மையாவே ஏற்ற பானம் கிடையாது ,இதோட முக்கிய காரணம் என்னானு பாத்தீங்கன்னா கார்போ குறைஞ்ச அளவிலும் பொட்டாசியம் அதிக அளவிலும் இருக்கிறது தான் காரணம் .இன்னொரு முக்கியமான விஷயம் என்னனு கேட்டீங்கன்னா இளநீரை கட் பண்ண உடனே குடிச்சிடனும் ,அத ரொம்ப நேரம் கழிச்சி குடிச்சீங்கனா அதுல உள்ள சத்துகள் கொரஞ்சி தோற்று நோய் பிரச்சனையே ஏற்படுத்தும் .