கூந்தல் வளர்ச்சி ஒரு சமயத்தில் திடீரென நின்று போயிருக்கும். இனி வளராது என நினைத்திருப்பீர்கள்.
ஆனால் கூந்தல் திரும்பவும் வளர சிறிது காலம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி மரபணுக்கள் கொண்டிருக்கும். ஆகவே முயற்சியை தளர விடாமல் இந்த குறிப்பினை தொடர்ந்து வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள். ஒன்றன்பின் ஒன்றாக முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தி உண்டாகி, முடி நீளமாக வளர்வதை காண்பீர்கள். அதற்க்காக சில இயற்க்கை குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இஞ்சி எண்ணெய்
இஞ்சி - பெரிய துண்டு
எலுமிச்சை - 1
நல்லெண்ணெய் - 1 கப்
இஞ்சி கொஞ்சம் எடுத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து அதிலிருந்து சாறெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு இஞ்சி சாற்றுக்கு ஏற்ப எலுமிச்சப்பழத்தை சாறு பிழிந்து கலந்து கொள்ளுங்கள்.இதற்கிடையில் தலைக்கேற்ப நல்லெண்ணெயே இவற்றுடன் கலக்கி கொள்ளுங்கள்.
இதன் பின்பு இந்த கலவையை நன்கு தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாச் செய்து ஒரு அரை மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும் அப்படி வாரம் 1 முறை செய்து வந்தால் தலை முடி உதிர்வதை நிறுத்தி தலைமுடி மிகவும் நன்றாக வளரவும் நல்ல கருமை நிறமாகவும் பொலிவாகவும் காணப்படும்.
அது மட்டும் இல்லாமல் இந்த எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் தரும்.