தலைமுடி ஒருவரது அழகில் முக்கிய பங்கை வகிக்கிறது.சிலருக்கு கூந்தல் நீண்டு இடுப்புக்கும் கீழே தவழும்.இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது.நீங்கள் கூந்தல் வளர நிறைய அழகுக் குறிப்புகளை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அவை சரியாக உபயோகமாகவில்லை என்று கவலை மட்டும் தான் மிச்சம்....
ஆனால் தற்போது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதிக்கிறது. முக்கியமாக ஏராளமானோர் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகிறார்கள்.
ஆகவே அழகு நிலையங்களுக்குச் சென்று தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.
இந்த தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தலைமுடி உதிர்விற்கு காரணம் கூந்தலின் வேர்கால்கள் போதிய அளவிற்கு தூண்டப்படாமல் இருப்பதுதான்.இயற்கை வழிகளை நாடினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். பெரும்பாலானோர் தலைமுடி உதிர்வதைத் தடுக்க முதலில் தேடுவது எண்ணெய்களைத் தான். ஏனெனில் எண்ணெய்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று.