யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது விதிமுறைகளுக்கு முரணானது, எனினும் வீடியோக்களை நேரடியாக யூடியூப் சர்வர்களில் இருந்து சாதனத்திற்கு ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். டவுன்லோடு செய்யப்படும் வீடியோ பொதுவெளியில் இருப்பின் அது காப்புரிமை மீறல் பிரச்சனையாகி விடும். இவ்வாறான சமயத்தில் வீடியோவுக்கு உரிய நபரிடம் இருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட் என்றால், குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தின் அபவுட் பகுதிக்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை நேரடியாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். இது முடியாவிட்டால் இணையத்தில் கிடைக்கும் இலவச மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தலாம்