பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்."கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)