ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் அருள் இருக்கும். எனவேதான் மகாலட்சுமிக்கு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார் மகா விஷ்ணு. மகாலட்சுமி யோகம் உங்க ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்தாலும் உங்கள் இல்லத்திலும் செல்ல வளம் பெருகும்.
ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள்.
கோச்சார ரீதியாக தனுசு ராசியில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவானுடன் கேது பகவான் இணைந்திருக்கிறார். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அமைப்பு கோடீஸ்வர யோகத்தை தரக்கூடியது.