இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். காலையில் கண் விழிக்கும் போது ஸ்க்ரோலிங் செய்யும் விரல்கள் இரவில் தூங்கப் போகும் வரை நின்ற பாடில்லை. அந்தளவுக்கு மொபைல் போன் மக்களுக்கு ஒரு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது. ஆனால் இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை நோண்டலாமா? அப்படி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு சரியா? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இது குறித்து உடல்நல வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால் இரவில் மொபைல் போன் பயன்படுத்துவது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது.
மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். இது உங்கள் பார்வையை மட்டுமல்ல, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இனி மொபைலை நீங்கள் தூங்கும் அறைக்கு எடுத்துச் செல்லாதீர்கள். இரவு நேரங்களில் மொபைல் பார்ப்பதால் எந்த மாதிரியான ஆபத்துகள் உண்டாகின்றன, வாங்க பார்க்கலாம்.