கணவன் மனைவி இருவருக்கும் இடையே இடைவெளி, இரகசியங்கள் என எதுவும் இல்லாமல் இருப்பதே உண்மையான உறவின் ஆணி வேர். சில சமயங்களில் கணவன், மனைவி இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒருசில விஷயங்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவர் மறைக்க வேண்டியதாகிவிடுகிறது. அது நமக்கு வருத்தத்தை தரக்கூடியதாக இருந்தாலும் கூட, கோபப்படுவதை தவிர்த்து, என்ன காரணத்திற்காக உங்களது கணவன்/மனைவி உங்களிடம் இருந்து ஒருவிஷயத்தை மறைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.