சிக்கன் அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்பது சந்தேகத்தையும் தாண்டி நம்பிக்கையாகவே மாறிவிட்டது. ஆனால் இது முற்றிலுமாக உண்மையல்ல. ஏனெனில் எந்த முறையில் சமைக்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவுகள் கணிக்கப்படும். சிக்கனை பொறுத்த வரை அதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற அதை க்ரில் அல்லது ரோஸ்ட் முறையில் செய்து சாப்பிட வேண்டும்.