மனித உறவுகளுக்கு நம்பிக்கை மிக முக்கியமான ஒரு அஸ்திவாரம். ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் ஒரு வலிமையைத் தரும். வாழ்க்கையின் துன்பங்களைச் சந்திக்க ஒரு வித தெம்பைத் தரும்.ஆனால் இந்த நம்பிக்கை ஒருவர் மேல் ஏற்படுவது என்பது ஒரு சவாலான விஷயம். எல்லோருக்கும் எல்லோர் மீதும் நம்பிக்கை ஏற்படாது. அதுவும் வாழ்க்கையில் துரோகத்தை சந்தித்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.