கணவன், மனைவியாக இருந்தாலும் சரி, காதலன், காதலியாக இருந்தாலும் சரி உறவில் சில விஷயங்களை அதீத காதலின் வெளிபாடாகவோ, ஆண் என்ற அகம்பாவத்தினாலோ செய்வது மிகவும் தவறு. உரிமையாக இருந்தாலும் உரிமை மீறல் குற்றம் தானே என பெண்கள் கூறுகின்றனர்.தோழிகள் வீட்டிற்கு சென்று வரும் போது நேர தாமதம் ஆவது, ஆண் தோழர்களுடனான நட்பை குறைத்துக் கொள்ள அல்லது முறித்துக் கொள்ள கூறுவது, ஆசை என்றால் அணைப்பதும், கோபம் என்றால் குரைப்பதும் என்ற சுபாவம் போன்றவை ஆண்கள் செய்யும் தவறுகள் என பெண்கள் கூறுகின்றனர்.