காதல் என்பது என்றும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் நமக்கு முதல் நாள் இருந்த காதல் உணர்வும் புரிதலும் வாழ்நாள் முழுவதும் அதே போன்று நீடிப்பதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள், முதல் நாள் இருந்த அதே காதலும், புரிதலும், விட்டுக்கொடுத்துப்போகும் குணமும் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்று..! ஏன் காதல் நாட்கள் செல்ல செல்ல வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு விஷயமாகிறது? அதற்கு என்ன தான் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்த பகுதியில் காணலாம்.