இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுனரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். 2018ம் ஆண்டின் முதல் பாதி முடிந்து விட்டது. பள்ளிகள் முழு ஆண்டு விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளி படிக்கும் பிள்ளைகள் புதிய வகுப்புகளுக்கான கனவில் இருப்பார்கள். பெரியவர்கள், 2018ம் ஆண்டின் முதல் பாதியின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், கடந்த காலம் இன்னொரு முறை திரும்ப வராது. எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் ஒவ்வொருவரும் இருக்கிறோம். ஆகவே நமது ஆற்றல் முழுவதும் நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் செலுத்த வேண்டும். வருடத்தின் முதல் பாதியில் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இனியும் அதனை வீண் செய்யாமல் அடுத்த பாதியில் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் பெற காலம் உள்ளது என்று காத்திருங்கள். ஒரு க்ளாசில் பாதி அளவு நீர் இருக்கும்போது நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் இந்த கிளாசில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்று கூறுவர். அதுவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், பாதி கிளாஸ் காலியாக உள்ளது என்று கூறுவார்கள். அது போல தான் வாழ்க்கையும். நாம் வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் நமது சந்தோஷம் இருக்கிறது. இதில் ஜோதிடம் என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை கணிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழியாகும். அதனால் தான் நாங்கள் தினமும் இந்த ஜோதிடப் பதிவை உங்களுக்காக தொகுத்துத் தருகிறோம். இந்த மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு ராசியினரும் இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.