வாழ்க்கை ஒரு போதும் நமக்கான சிறந்த விஷயங்களை பரிசளிக்காது. நாம் தான் அதற்காக உழைக்க வேண்டும். வாழ்க்கை என்பது பெயரளவில் வேண்டுமானால் பூமிதிப்பது போல இருக்கும். ஆனால், அதன் உண்மை தன்மை என்பது சுட்டெரிக்கும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நமக்கான புதிய படங்களை அனைத்து தினமும் கற்பிக்க தயார் செய்து வைத்திருக்கும். ஒரு நாள் அது எளிமையானதாக இருக்கும், ஒரு நாள் அது மிகவும் கடுமையானதாக இருக்கும்.படித்து, முடிக்கும் வரை நமக்கு வாழ்க்கை கொஞ்சம் ஜாலியாக தான் இருக்கும். அப்பாவின் நிழலில் இருந்து வெளிவந்து... சொந்த காலில் நிற்கும் போது தான் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பும், வாழ்க்கையின் புரிதலும் நாம் அறிய இயலும். 25 வயதுக்கு மேல் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல உருமாறும். அதில் கொஞ்சம் கச்சிதமாக விழாமல் பயணிக்க வேண்டும் எனில்... குறைந்தபட்சம் இந்த 8 விஷயங்களை நீங்கள் கற்றிருக்க வேண்டும்.