காதல் சொல்வது எப்படி
யாராவது நண்பர்களை வைத்து புரபோஸ் பண்ண தூது அனுப்புவது அந்த காலம். தானே துணிந்து வந்து காதலை சொல்லும் ஆண்களைத் தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்நாள் முழுவதும் உங்கள் காதலி உங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுவாரஸ்யமானதாக உங்கள் பிரபோஸல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களுடைய நண்பர்களோ அல்லது சினிமாவில் ஏதாவதொரு ஹீரோ பண்ணுவது போல் பண்ண முயற்சி செய்யாதீர்கள். உங்கள் காதலிக்கு நீங்கள் தான் ஹீரோ. சோ காப்பி வேண்டாமே.