திருமண உறவில் ஏதோ சிக்கல் ஏற்படுவது போல தோன்றுகிறதா? நீண்ட நாட்களாக அதற்கான தீர்வு என்ன? எதனால், யாரால்? திருமண உறவில் சிக்கல் ஏற்படுகிறது என்று தெரியாமல் தவித்து வருகிறீர்களா? மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு முன்... முதலில் நீங்கள் உங்கள் உறவில் சரியான நபராக இருந்து வருகிறீர்களா என்ற சுய பரிசோதனை செய்துக் கொண்டதுண்டா? இதற்கு நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஒருமுறை உங்கள் கண்ணாடி முன் சென்று நில்லுங்கள். நாம் இங்கே கலந்தாலோசிக்க இருக்கும் ஐந்து விஷயங்களை நீங்கள் செய்கிறீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.ஒருவேளை... ஆம்! என்றால்... உங்கள் உறவை சீர்குலைக்கும் கருவியே நீங்கள் தான் என்பதை அறிந்துக் கொள்ள இயலும். சில முறை தவறுகள் நம்முள்ளேயும் இருக்கக் கூடும். அதை ஒப்புக் கொண்டு மாற்றம் தேடும் மனம் மட்டுமே தேவை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது. தவறுகள் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் நிச்சயம் அளிக்கப்படும்..