காதல் என்றால் என்று? ஒரு கேள்வி கேட்டால் நிறைய விசித்திரமான பதில்கள், காலம், காலமாக கூறப்படும் சில குப்பை பதில்கள் கிடைக்குமே தவிர, உண்மையான பதில் கிடைப்பது மிகவும் அரிது. காரணம், காதலை வார்த்தைகளால் கூறிட இயலாது. பலரும் ஈர்ப்பு, கவர்ச்சி, காமம், இச்சை போன்றவற்றை காதலுடன் ஒப்பிட்டு, காதலாக கருதி... பிறகு ஏமார்ந்து, காதல் கொடுமையானது, வலிமிகுந்தது என ஒப்பாரிப் பாடல் பாடத் துவங்கிவிடுகிறார்கள்.
இது எப்படி தெரியுமா இருக்கிறது... இயற்கை தந்த மரங்களை எல்லாம் செயற்கை அழகுக்காக வெட்டிவிட்டு உலகில் வெப்பம் அதிகரித்துவிட்டது என்பது போல இருக்கிறது. ஆம், காதல் ஓர் இயற்கை... அதில் செயற்கைத் தனமாக நடித்துக் கொண்டு காதல் கொடியது என்று கூறுவது பெரிய முட்டாள்தனம். நீங்கள் உண்மையாக ஒரு காதல் உறவில் இருந்திருந்தால்... 25 வயதிற்குள் இந்த 20 விஷயங்களை அனுபவித்திருப்பீர்கள்...