தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே….கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்,பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம் ,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால்வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த 'இராஜேந்திர சோழன்'.இவனின் காலடிக்கு கூடத்தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ்ந்துகொண்டு இருக்கிறோம்…