மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.