நாம் வாழ்வதற்கே பணம் போதாமல் இருக்க, குழந்தையைப் பெற்றெடுத்து அதையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரி தான். ஆனால் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு வரவே பல வருடங்கள் ஆகும். வீட்டின் நிதி நிலைமையை அதிகரித்துக் கொள்கிறேன் என்று வருடக்கணக்கில் தள்ளிப் போட்டால், வயது அதிகரித்து, பின் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.