ஒரு பெண் கருவுற்ற உடனே அவள் படும் ஆனந்தம் என்பது எல்லையில்லாதது. அந்த பத்து மாதங்களும் அவள் படும் கஷ்டங்கள் கூட அந்த பிஞ்சு குழந்தையின் பாத வருடலில் காணாமல் போய்விடும். ஒன்பது மாதத் தொடக்கத்திலயே கருவில் இருக்கும் குழந்தை திரும்புதல், சுற்றுதல், கை கால்களை அசைத்தல், காலால் உதைத்தல், விக்கல் எடுத்தல், நிலையை மாற்றுதல், ஏன் சில சமயங்களில் உங்கள் செல்லக் குழந்தை குட்டிக் கரணமே அடிக்கும். இப்படி தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் தொட்டு பார்த்து பார்த்து பூரிக்கும் ஒரு தாயின் சந்தோஷம் அளவு கடந்தது.இப்படி பத்து மாதங்களும் வயிற்றில் வளரும் குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.