மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம். சூரியன் 15ஆம் தேதி முதல் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இன்று முதல் மகரம் ராசிக்கு மாறுகிறார். புதன் வரும் 9ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு 15ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். துலாமில் குருபகவான், தனுசில் சனி பகவான், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன.