2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர். ஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, கடந்த வாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அந்த விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று (ஜூன் 3 ஆம் தேதி) நடைபெற்றது. விஜய் அவார்ட்ஸ் 2018ல் விருது வாங்கிய சினிமா பிரபலங்களில் பட்டியல் இதோ உங்களுக்காக...